04.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்களின் ஈழத்துத் தமிழ் கலைஞர்கள் தொடர்பான எண்ணக் கருவுக்குமைய, மேற்படி கலைஞர் சந்திப்பு நித்திலம் கலையகத்தில் இடம்பெற்றது. அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையடப்பட்டன.
முக்கியமாக அருகிவரும் ஈழத்துத் தமிழ்ப் பாராம்பரியக் கலை வடிவங்களுக்கும் அதுதொடர்பான கலைஞர்களுக்கும் உயிரூட்டி அவற்றை மீளுருவாக்கி அவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இச் சந்திப்பானது திட்டமிடப்பட்டதை அன்று சந்திப்பில் கலந்துகொண்ட அனைவரும் அறிவர்.
மேற்படி குறிக்கோளை மையமாகக் கொண்ட அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறையாக இருந்தனர். குறிப்பாகக் கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதாக அவ் அமைப்பை உருவாக்க வேண்டும் எனில் எவ்வகையான ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாகப் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கிய விடயமாகத் தேர்தல் அரசியலுக்கு உட்படாதவாறு இவ் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறையாக இருந்தனர். கலந்து கொண்ட அனைவரினதும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டவாறு கூட்டம் நிறைவுபெற்றது.

