மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரதும் விருப்பின் அடிப்படையிலேயே இந்த அமைப்புக்குப் பெயரிடப்பட்டது.
எமது நாட்டிற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் “ஈழத் திரு நாடு” என்ற அடிப்படையில் “ஈழம்” என்ற சொற்பதத்துடன் ஆரம்பிக்கும்வகையில் “ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம்” என்ற பெயரிட்டு அதனை அழைப்பது என்றும் தமிழ் கலைஞர்களுக்குரிய ஒரு தேசிய அமைப்பாக அது வளர வழிவகுக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய யாப்பு ஒன்றும் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்களரல் தயாரிக்கப்பட்டது.
அந்த யாப்பை தேசிய மாநாட்டில் சமர்ப்பித்து அதில் கலந்துகொள்ளவிருக்கும் அத்தனை கலைஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பட்சத்தில் அவர்களின் கருத்துக்கமைய ஏதாவது திருத்தத்தை மேற்கோள்ளப்பட வேண்டுமாயின் திருத்தப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முடிவைக் கலைஞர்கள் எட்டியிருந்தனர்.
அந்தவகையில் ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய மாநாடானது 26.01.2025 அன்று பிற்பகல் 1 மணியளவில் வவுனியாவிலுள்ள சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்றது.
அதில் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்கள் எண்ணக் கருவில் உதித்ததென்ற அடிப்படையில் அவரே அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று அனைவரும் தீர்மானித்தபடி மத்திய குழு என்று தெரிவு செய்யப்பட்டது.


