முதலாவது கூட்டத் தீர்மானத்துக்கு அமைய இரண்டாவது கூட்டம் 18.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. முதலாவது கூட்டத்துக்கு வராத பலர் இக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இரண்டாவது அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
எல்லா வகைக் கலைஞர்களையும் உள்ளடக்கியவாறு அவ்வமைப்பு அமைய வேண்டும் என்றும் அது ஒரு தேசிய மட்டத்தில் பணியாற்றக் கூடிய வல்லமையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுவும் பலரது நோக்கமாகக் காணப்பட்டது.
இவ் அமைப்பானது தேசிய மட்டத்தில் சேவையாற்றக் கூடிய அமைப்பாக உருவாக வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதால் அதற்குரிய பெயரையும் அதற்குப் பொருத்தமானதொன்றாக இடவேண்டும் எனவும் அவ்வமைப்புக்குரிய யாப்பும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியவாறு அமையப்பெற வேண்டும் எனவும் அனைவரும் விரும்புவதால் சட்ட நுணுக்கங்களைக் கவனித்து அதனை உருவாக்க வேண்டும் என்ற வகையில் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்களிடம் அப்பணி கையளிக்கப்பட்டது. கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்ட அமைப்பு உருவாக்கம் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்வாங்கிக் கொண்டே அவ்வமைப்புக்குரிய பெயரும் யாப்பும் உருவாக்கப்படும் என்ற விடயத்தில் அனைவரும் உறுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

