சிறுவர்களின் கரங்களில் புத்தகமே இருக்கட்டும்!

திருகோணமலை தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வீதி நாடகம் மூதூர் பிரதேச பாடசாலையொன்றிலும், கிண்ணியா பிரதேச செயலகத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

அருவி கலை அரங்க நாடகக் குழுவினரின் ஆற்றுகையில் இடம்பெற்ற இந்நாடகம் மூலம் சிறுவர் உழைப்பை ஒழிப்பதன் அவசியமும் அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவமும் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சிறுவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம்…

 

Recommended For You

About the Author: admin