நுண்கடன் திட்டங்களால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அருவி கலை அரங்கக் குழுவினரால் சிறப்பான வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.
கலையின் வலிமையைப் பயன்படுத்தி, நுண்கடன் தொடர்பான சவால்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை எளிமையாகவும் தெளிவாகவும் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.
கலையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.

